உட்டாலங்கடி
குண்டக்க. . .மண்டக்க. . .
Sunday, October 13, 2013
Sunday, June 19, 2011
கரண்டே, Where are you. . .
![]() |
கரண்டே! கரண்ட்டே! நீ எப்ப வருவ? நீ வராம எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. நீ இல்லாம ஒரு செகண்ட் போனா கூட ஒரு யுகமே போன மாதிரி இருக்கு! எந்த வேலையும் ஓடமாட்டேங்குது! எதையும் ரசிக்க முடியல! தினம் தினம் நான் சாமிட்ட என்ன வேண்டறேன் தெரியுமா? இன்னிக்காவது என்ட்ட இருந்து கரண்ட்ட பிரிச்சுடாத ஆண்டவானுதான். உன்னால படிப்பு போச்சு! வேலை போச்சு! - இப்ப வாழ்க்கையே வெறுத்துப் போச்சு! நீ என்ன ரொம்ப தொந்தரவு பண்ற! உன்னால பட்ட அவஸ்தையெல்லாம் போதும். இப்படி கொஞ்சம் கொஞ்சமா என்ன கொல்றதுக்கு ஒரேயடியா ஷாக் குடுத்து நீயே என்ன கொன்னு போட்றேன். நிம்மதியாவாது போய்ச்சேருவேன் கரண்ட் இல்லன்னு அவனவன் நேரத்த மாத்திறான். தொழில மாத்திறான். கட்சிய மாத்திறான் - ஆனா இங்க ஆட்சியே மாறியிருக்கு! எந்த ஆட்சி வந்தாலும் நீ மட்டும் தினந்தினம் போயிட்டுத்தான் இருக்க! நானும் நீ இப்ப வருவ, அப்பறம் வருவன்னு சுவிட்சு மேல கைய வெச்சு காத்திருக்கேன்! இதுக்கு மேலயும் நீ அப்படித்தான் இருப்பேன்னு அடம்பிடிச்சேன்னா. . . வேற வழியே இல்ல! சுவிட்சில இருந்து கையெடுத்துட்டு மல்லாக்கப் படுத்துக்கிட்டு விட்டத்த பாத்துக்கிட்டே மறுபடியும் போய் பகல் கனவு காண வேண்டியது தான்! இப்படிக்கு, உன் வரவுக்காக தினம் தினம் காத்திருக்கும், பவரில்லாத பாமரன்! -தமிழ் வசந்தன் |
கஷ்டமும், சந்தோஷமும். . .
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டத கவிதையா எழுதி சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அந்த சந்தோஷந்தான் இந்த கஷ்டம். கஷ்டந்தான் - ஆனா சந்தோஷமாயிருக்கில்ல சந்தோஷந்தான் - ஆனா பூராம் கஷ்டமாயிருக்கு. இப்பிடி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இப்பல்லாம் கஷ்டமே சந்தோஷமாயிருச்சு - ஆனா சந்தோஷம் ரொம்ப கஷ்டமாயிருச்சு பாருங்க! நான் என் நிலைமைய சொல்றேன் உங்களுக்கு கஷ்டமாயிருக்கு! எனக்கு நிலைமையச் சொல்றதில மட்டுந்தான் சந்தோஷமே இருக்கு. ஆமாங்க!- நிலைமை அவ்ளோ கஷ்டமாயிருக்கு! சரி. . .. ரொம்ப கஷ்டப்டாதீங்க. கவிதைய முடிச்சிடறேன். சந்தோஷந்தானே . . . கஷ்டப்பட்டாத் தான் சந்தோஷம் கிடைக்கும்! சந்தோஷமான கஷ்டகாரன் -தமிழ் வசந்தன் |
Thursday, October 28, 2010
உட்டாலங்கடி காமெடிகள்
காமெடி | களம் | காமெடியன்கள் | உட்டாலங்கடி |
கோஷ்டிச் சண்டை காமெடி | காங்கிரஸ் | தங்கபாலு, இளங்கோவன், வாசன், சிதம்பரம். . . | தொண்டன்: ஐயோ, கிறுக்கனாக்குறாங்கெளே என்னை! எனக்கு சோத்தை எங்கடா வெச்சிருக்கீங்க. அதைச் சொல்லிட்டுப் போங்கடா |
கண்ணாமூச்சி காமெடி | அமெரிக்கா-பாகிஸ்தான் | ஒபாமா-ஒசாமா | பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் ஒசாமா: நாங்கள்ளாம் சாக்கடையிலேயே ஒரு மாமாங்கம் கூடு கட்டி வாழ்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களாக்கும் |
கோ. . . கோ. . . காமெடி | கூட்டணி பிடிப்பது | பா.ம.க. | ஹலோ...ஊருக்குள்ள எங்களப்பத்தி கேட்டுப்பாருங்க! நாங்க அடிவாங்காத ஏரியாவே கெடயாது! |
ஆட்டத்துக்கு ஆள்சேக்கிற காமெடி | கூட்டணி | அதிமுக - தேமுதிக | வரும்... ஆனா, வரா...து! |
தானே தலைல அடிச்சிக்கறது | இலட்சியத் திமுக | விஜய டி.ராஜேந்தர் | ஆளே இல்ல. பெல்லு! |
நீயா நானா காமெடி | திமுக | ஸ்டாலின் - அழகிரி | கலைஞர்: என்னடா நெனச்சிட்டிருக்கீங்க. ஃபோன் பண்ணா இவன் ஒருத்தன கூப்பிடுங்கிறான். அவன் வேற ஒருத்தன கூப்பிடுங்கிறான். இல்லைனா ஃபோன் பண்றவன் பேச விட மாட்டேங்கிறான். என்னடா நெனச்சுட்டிருக்கீங்க, எப்டிடா பேசுறது, இனி இந்த ஃபோன் இருந்தா தானடா. . . |
நல்லவன் காமெடி | அதிமுக-மதிமுக | ஜெயலலிதா-வைகோ | அப்பத்தான் ஒருத்தேன் சொன்னான். எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்குறான்டா. இவன் ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா! |
Subscribe to:
Posts (Atom)