Thursday, October 28, 2010

உட்டாலங்கடி காமெடிகள்


காமெடி களம் காமெடியன்கள் உட்டாலங்கடி
கோஷ்டிச் சண்டை காமெடி காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன், வாசன், சிதம்பரம். . . தொண்டன்: ஐயோ, கிறுக்கனாக்குறாங்கெளே என்னை! எனக்கு சோத்தை எங்கடா வெச்சிருக்கீங்க. அதைச் சொல்லிட்டுப் போங்கடா
கண்ணாமூச்சி காமெடி அமெரிக்கா-பாகிஸ்தான் ஒபாமா-ஒசாமா பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் ஒசாமா: நாங்கள்ளாம் சாக்கடையிலேயே ஒரு மாமாங்கம் கூடு கட்டி வாழ்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களாக்கும்

கோ. . . கோ. . . காமெடி

கூட்டணி பிடிப்பது
பா.ம.க.
ஹலோ...ஊருக்குள்ள எங்களப்பத்தி கேட்டுப்பாருங்க! நாங்க அடிவாங்காத ஏரியாவே கெடயாது!

ஆட்டத்துக்கு ஆள்சேக்கிற காமெடி

கூட்டணி

அதிமுக - தேமுதிக

வரும்... ஆனா, வரா...து!

தானே தலைல அடிச்சிக்கறது

இலட்சியத் திமுக

விஜய டி.ராஜேந்தர்

ஆளே இல்ல. பெல்லு!

நீயா நானா காமெடி

திமுக

ஸ்டாலின் - அழகிரி

கலைஞர்: என்னடா நெனச்சிட்டிருக்கீங்க. ஃபோன் பண்ணா இவன் ஒருத்தன கூப்பிடுங்கிறான். அவன் வேற ஒருத்தன கூப்பிடுங்கிறான். இல்லைனா ஃபோன் பண்றவன் பேச விட மாட்டேங்கிறான். என்னடா நெனச்சுட்டிருக்கீங்க, எப்டிடா பேசுறது, இனி இந்த ஃபோன் இருந்தா தானடா. . .

நல்லவன் காமெடி

அதிமுக-மதிமுக

ஜெயலலிதா-வைகோ

அப்பத்தான் ஒருத்தேன் சொன்னான். எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்குறான்டா. இவன் ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா!