Showing posts with label மின்தடை. Show all posts
Showing posts with label மின்தடை. Show all posts

Sunday, June 19, 2011

கரண்டே, Where are you. . .


கரண்டே! கரண்ட்டே! நீ எப்ப வருவ?
நீ வராம எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது.
நீ இல்லாம ஒரு செகண்ட் போனா கூட
ஒரு யுகமே போன மாதிரி இருக்கு!
எந்த வேலையும் ஓடமாட்டேங்குது!
எதையும் ரசிக்க முடியல!

தினம் தினம் நான் சாமிட்ட
என்ன வேண்டறேன் தெரியுமா?
இன்னிக்காவது என்ட்ட இருந்து
கரண்ட்ட பிரிச்சுடாத ஆண்டவானுதான்.

உன்னால படிப்பு போச்சு!
வேலை போச்சு! - இப்ப
வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!

நீ என்ன ரொம்ப தொந்தரவு பண்ற!
உன்னால பட்ட அவஸ்தையெல்லாம் போதும்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமா என்ன கொல்றதுக்கு
ஒரேயடியா ஷாக் குடுத்து நீயே என்ன கொன்னு போட்றேன்.
நிம்மதியாவாது போய்ச்சேருவேன்

கரண்ட் இல்லன்னு அவனவன்
நேரத்த மாத்திறான்.
தொழில மாத்திறான்.
கட்சிய மாத்திறான் - ஆனா இங்க
ஆட்சியே மாறியிருக்கு!

எந்த ஆட்சி வந்தாலும்
நீ மட்டும் தினந்தினம்
போயிட்டுத்தான் இருக்க!
நானும் நீ இப்ப வருவ,
அப்பறம் வருவன்னு
சுவிட்சு மேல கைய வெச்சு
காத்திருக்கேன்!

இதுக்கு மேலயும் நீ
அப்படித்தான் இருப்பேன்னு
அடம்பிடிச்சேன்னா. . .
வேற வழியே இல்ல!

சுவிட்சில இருந்து கையெடுத்துட்டு
மல்லாக்கப் படுத்துக்கிட்டு
விட்டத்த பாத்துக்கிட்டே
மறுபடியும் போய்
பகல் கனவு காண வேண்டியது தான்!

இப்படிக்கு,
உன் வரவுக்காக
தினம் தினம் காத்திருக்கும்,
பவரில்லாத பாமரன்! 

-தமிழ் வசந்தன்